Wednesday, 18 May 2016

வன்னியர் கல்விக்கு வீர சைவ மடம் அமைத்த மழவராயரும் -பெண்ணாகடம் கடந்தையாரும்.

வன்னியர் கல்விக்கு   வீர சைவ மடம் அமைத்த மழவராயரும் -பெண்ணாகடம் கடந்தையாரும்.



தென்னிந்திய கோவில் கல்வெட்டுகள்  PART I   செப்பேடு  வருடம்  1511 A D


சைவ சமய ஆசிரியர்  அருணாசல விருபாட்சி தேவரிடம் இருந்த செப்பேடு  படி எடுக்கப் பட்டு தஞ்சை சரபோசி மகாராஜாவிடம் கொடுக்கப் பட்ட செப்பேடு சாசனம் கூறும் செய்திகள்.


சக ஆண்டு 1433 ம் வருடம் விபவம் தை 13 ம் நாள் தானம் கொடுக்கப்பட்ட  நிலம் மற்றும் வேறு சலுகைகளை  செய்து கொடுத்த குன்னத்தூர்நாடு நாகைய மழவராய நயினார் அவர்களின் மகன் கட்டியப்ப நயினார்  அவர்களும் பெண்ணாகடம் பெரிய நாயக நயினார் மகன் பிரளயம் காத்த கடந்தையார்  கோத்திரத்தில் வந்த  பொன்னாலந்த கடந்தையாரும் அவர்கள் முன்னோர்கள் திசைமுக தேவர் என்ற சைவ சமய ஆசிரியருக்கு செய்து கொடுத்த சொத்து மற்றும் மரியாதைகளை பற்றியும் அவருடைய மடத்துக்கு உரிய எல்லை பற்றிய குறிப்பையும் மேலும்  கும்பகோணம் ,பேரளம்,திருவெண்காடு தாராசுரம்,சிதம்பரம்  போன்ற இடங்களில் இருந்த மடங்களை பற்றிய குறிப்பையும் அந்த செப்படு குறிப்பிடுகிறது.

 விஜயநகர அச்சுதராயர் காலத்தில் கும்பகோண மடத்திற்க்கும்  சிதம்பரம் பச்சை கண்டியர் மடத்துக்கு  எல்லை மற்றும் சொத்து பிரச்சினை வந்த போது மழவராய நயினார்கள்   தீர்த்து வைத்தனர் என்ற குறிப்பும் உள்ளது.





இதில் குறிப்பிட பட்ட மடங்கள் எல்லாம் வீர சைவ மதத்தை சேர்ந்த மடங்கள்  என்று கூறப்பட்டுள்ளது.

விஜயநகர விருப்பாட்சி தேவராயர் ராச்சியம் பண்ணும் வருடம் சக ஆண்டு 1433 ம் வருடம் விபவம் தை 13 ம் நாள்  ராசராச வளநாட்டு ராஜேந்திர சோழ வள நாட்டுள் மிழலை நாட்டுள் சேர்ந்த சோழ வளமாகிய தலத்துள்  வன்னியர் குல கிரில தரில நாட்டுக்கு அதிபதிபராகிய குண்ணத்தூர் கட்டியப்ப நயினார் குமாரர் நாகைய மழவராய நயினார் அவர்களும் பெண்ணாகடம் பிரளயம் காத்த கடந்தையார் கோத்திரத்தில் பொன்னளந்த கடந்தை குமாரன் பெரியநாயக்க நயினார் அவர்களும் நம்முடைய குண்ணத்தூர் காணிக்கும் பெண்ணாடக காணிக்கும் பூர்வாசார்யாராகிய குருக்களையயர் திசைமுக தேவர் அவர்களுக்கும் கடந்தையார் கிராமம் நாகையமழவராய நயினார் அவர்களுக்கும் சர்வ மானியமாக கொடுக்கப் பட்ட ஊர்களும் அதில் உள்ள நிலங்களுக்கு உரிய எல்லைகளும் கொடுக்கப் பட்டுஉள்ளது.



மாக்குடி,காரச்சேரி,கடம்பங்குடி,பண்ணைகிராமம், மாறபாடி,
நெடுங்கொல்லை,பூந்தோட்டம்,கீழ்மாராயம்,மேல்மாராயம்,நரிக்குடி,
ராசாக்கள் நல்லூர்,சோழபுரம் உள்ளிட்ட ஊர்களில் நல்லபெருமாள் பிள்ளை,மானாபிள்ளை,பெத்த பெருமாள் பிள்ளை,சிதம்பர முத்திரியன், ரெகுநாத முத்திரியன் இவர்களுக்கு பிரித்து கொடுத்து அதில் வரும் வருமானத்துக்கு திருவையாற்று சக்கரம் என்ற பணம் கொடுக்க கூறப்பட்டு உள்ளது.    









சோழ வாஞ்சமை நாட்டவர்கள் குருமடத்துக்கு மானிய கட்டளை தருமம்  

உள்ளூர் நாட்டவர், குருவூர் நாட்டவர்,கீழ்ஆனைமேடு நாட்டவர்,மண்மேடு பளைங்குட்ட நாட்டவர்,பீராக்கன் நாட்டவர்,பாவனூர் கூத்தனூர் நாட்டவர்,மாவுத்த யிருப்பு  நாட்டவர்,
வாண்டாயிருப்பு நாட்டவர்,அம்மையப்பன்  நாட்டவர், மாறாசேரி நாட்டவர்,கீழ்நரிக்குடி நாட்டவர், புத்து நாட்டவர்,கோயிலாச்சேரி கண்ணங்குடையார் தர்மம், களம்பரம் நாட்டவர், மிழலை நாட்டவர்,
சிறுகுடி நாட்டவர்,மட்டியூர் நாட்டவர்,உன்றாத்தம நாட்டவர்,
சீபுரந்தான் நாட்டவர், முட்டம் நாட்டவர்,இருப்புணியாம் நாட்டவர்,
மேலத்தியூர் நாட்டவர், வாழைகுறிச்சி நாட்டவர்,அமக்காவல் நாட்டவர், காவற்க்கூடம் நாட்டவர்,ஆளங்குரிச்சி நாட்டவர்,கடிச்சம்பாடி நாட்டவர், நீரத்தநல்லூர் நாட்டவர்,தேவனாச்சேரி  நாட்டவர்,ஆதனார் நாட்டவர், திருப்பிறம்பியம்  நாட்டவர், தின்னப்புலியூர் நாட்டவர் மடங்களுக்கு  மானியம் அளித்தவர்கள். 




கும்பகோணம் மடமும் -சிதமபரமடமும் செய்து கொண்ட எல்லை பிரச்சினைக்கு பற்றி விசாரணை செய்த மழவராய நயினார் 92 வயது கோவில் பூசகரின் உதவியுடன் தீர்த்து வைத்தார் என்ற குறிப்பு உள்ளது. திருவெண்காடு மடத்துக்கு அரியலூர் பாளையம் தானம் செய்யத செப்பேடு அவர்கள் அரசு முத்திரையுடன் உள்ளது என்றும் தற்போது திருவெண்காடு சோழபுர மடத்து திசைமுக தேவருடையது என்று தீர்த்து வைத்தனர்.






மழவராய நயினார்கள் தங்கள் பாட்டன்  செய்த தானத்தை மீண்டும் சரி செய்து வீர சைவ மடத்து பண்டாரங்களுக்கு நீங்கள் இன்று முதல் இந்த எல்லை பிரச்சனைக்கு வரவேண்டாம்.குருக்களயயர் வரத்தில் (அனுமதியில் ) தலம்  விடாமல் தலம் தாண்டி அனுபவித்து  கொண்டிருக்கட்டும் என்று கட்டளை யிட்டனர்.


     1511 AD செய்த செப்பேடு  மழவராய நயினார் அவர்களின் பாட்டனார் செய்த தானத்தை சரி செய்த செய்தியை கூறு கிறது.பதினான்காம் நூற்றாண்டுகளில்  ராசராச வளநாட்டு ராஜேந்திர சோழ வள நாட்டுள் மிழலை நாட்டுள் சேர்ந்த சோழ வளமாகிய தலத்துள்  வன்னியர் குல கிரில தரில நாட்டுக்கு அதிபர் என்ற செப்பேடு மிக முக்கியமான ஆவணம். 

 கும்பகோணம் ,பேரளம்,திருவெண்காடு, தாராசுரம்,சிதம்பரம்  போன்ற இடங்களில் இருந்த மடங்களை பற்றிய குறிப்பையும் அந்த செப்படு குறிப்பிடுகிறது. இது கல்விக்கு பதினான்காம் நூற்றாண்டில் வன்னிய அரசர்கள் செய்த மிகப்பெரிய தொண்டு.இப்போது இந்த மடங்களும்  சொத்துக்களும் யார் கையில் இருக்கிறது என்ற ஆய்வை கண்டிப்பாக செய்து  நம் பாட்டன் சொத்து யார் அனுபவித்து வருகின்றானர் என்று இளைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டும். 


பதினான்காம் நூற்றாண்டில் வன்னியர்கள் கல்விக்கு செய்த கொடை எல்லாம் வளந்தை என்ற பெண்ணை ஆற்றின் வடகரையில் இருந்து ஆரம்பித்து திருத்துறைப்பூண்டி பகுதியில் முடிகிறது. தற்போதைய் திருவாரூர் பகுதியின் கடம்பகுடியும்,நாகை உம்பளமும், நன்னிலம் பூந்தோட்டமும்,கும்பகோணம் கீழ்மாராயமும்,சோழபுரம் பகுதியின் நரிக்குடி ,ராஜாக்கள் நல்லூர் எல்லாவற்றையும் உள்ளடக்கிய பகுதியை தானமாக கொடுத்து உள்ளனர்.   தற்போது உள்ள இந்த ஊர்களின் பெயர்களை கொண்டே  கும்பகோணம் ,பேரளம்,திருவெண்காடு, தாராசுரம்,சிதம்பரம்    மடங்களின் எல்லைகளை அறிந்து கொள்ளலாம்.

   









Wednesday, 4 May 2016

கச்சிப்பள்ளி காமிண்டன் வெட்டிய ஏரி

கச்சிப்பள்ளி காமிண்டன் வெட்டிய ஏரி :


                     ஏரி இருக்கும் இடம் ஓமலூர் --தருமபுரி  நெடுஞ்சாலையில் பூசாரிபட்டி  அருகில் இருக்கும் ஊர் .ஏரியின் இருக்கும் ஊரின் இப்போதை பெயர்   "தாசசமுத்திரம் ". "தாச சமுத்திரம்" என்பது இந்த  ஏரிக்கு ஹோய்சாளர்கள் வைத்த பெயர். அதே பெயரில் இந்த ஊரும் இப்போது அழைக்கப்படுகிறது.எல்லா கல்வெட்டும் "தாசசமுத்திரம் "  ஏரி என்று சொல்ல ஒரு திருட்டு கூட்டம் மட்டும் இதை கச்சிப்பள்ளி என்ற ஊரின் ஏரி என்று கதை சொல்லிக்கொண்டு  இருக்கிறது. இதுக்கும்  கச்சிப்பள்ளி என்ற ஊரில் இருப்பதா சொல்லப்படும் ஏரிக்கும் எந்த தொடர்பும் இல்லை.வெட்டியவர் பெயரில் இப்போது அமைக்கப்பட்ட ஊர் கச்சிப்பள்ளி ஆக இருக்கலாம். அப்படி அமைக்கப்பட்ட ஊரில்  இன்றும் அதிக அளவில் இருப்பவர்கள் வன்னிய கவுண்டர்கள் மட்டுமே. அங்க மற்றவனுக்கு இடம் இல்லை. 

       வெட்டப்பட்ட வருடம் AD 996 ம் ஆண்டு ராஜராஜ சோழனின் பதினோராம் ஆட்சி ஆண்டில் கச்சிப்பள்ளி காமிண்டன் பெங்கிலன் மற்றும் அவன் தம்பி இருவரும் அமைத்தனர்.இந்த கல்வெட்டு இப்போது இருக்கும் இடம் சேலம் அருங்காட்சியகம்.


வன்னியர் தேசம் -தாச சமுத்திரம்




ஆயிரம் ஆண்டு ஏரி : ஓமலூர் –தருமபுரி சாலையில் பூசாரிப்பட்டி அருகில் உள்ளது . தாச சமுத்திரம் ஏரி , பேரரசன் ராசராசனின் பதினொன்றாம் ஆட்சி ஆண்டில் இந்த ஏரி கட்டப்பட்டது . கி.பி .996 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த ஏரி தற்போது ஆயிரம் ஆண்டைக் கடந்து விட்டது .ஏரியை அமைத்தவர் கச்சிப் பள்ளி காமிண்டன் (வன்னியர் ) பெங்கிலன் அமைந்தான் களி . அவனும் அவன் தம்பியும் கூட இருந்து வேலை செய்துள்ளனர் . இந்த ஏரியை அழியாமல் காப்பவர்களில் “கால் என் தலைமேல் ” என்கிறான் . இதற்க்கு அவர்களும் பாதம் பணிவேன் என்று பொருள்படும் .

“ஸ்வஸ்தி ஸ்ரீ
ராஜ ராஜ சோழ தேவற்கு
திருவேழுத்திட்டுச் செல்லா நின்ற
திருனல்லியாண்டு பதிநொற்றாவது
வடபூவாணிய நாட்டு
கச்சிப் பள்ளிக் காமிண்டந்பொங்கிலந் அமன்தாந் களியும்
எந்தம்பி................ம்
இவ்விருவே மெங்கள் கைய்யால்
மணலொழிக்கி இவ்வேரி கட்டிநோம்
இந்த நம் அழிவு படாமற் காத்தாந்
காலெந் தலை மேலென “

என்று முனைவர் . கொடுமுடி சண்முகன் அவர்கள் தனது நூலில் குறித்துள்ளார் .
காமிண்டன் அதாவது கவுண்டன் என்ற பட்டப் பெயர் கொண்ட வன்னியர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஏரியை வெட்டி போது மக்களுக்கு நன்மை புரிந்துள்ளனர் .


தாச சமுத்திரம் ஏரியும்  அதன் கல்வெட்டும் :



கச்சிப் பள்ளி காமிண்டன்  அமைத்த ஏரி: 
                 
                          கச்சி என்பது காஞ்சிபுரத்தை குறிக்கும் பெயர்.காஞ்சியில் இருந்து வந்த பள்ளி காமிண்டன்  அமைத்த ஏரி என்பதே இதன் பொருள். ஏரி பாசனம் எனபது பல்லவ நாட்டுக்கே உரிய பாசனமுறை அதை செயல் படுத்த அங்கு இருந்து வந்த பள்ளி காமிண்டன் அமைத்த ஏரியை உரிமை கொண்டாடும் வெள்ளாடுகளுக்கு ஏரி எங்க இருக்கு என்றும் தெரியல,அந்த கல்வெட்டு எங்க இருக்கு என்றும் தெரியல.ஆனா இப்போ கச்சிப்பள்ளி என்ற பெயரில் இப்போது இருக்கும் ஊரை மட்டும் வைத்து ஏரியே கச்சிபள்ளியில் இருப்பதா   ஒரு கதை எழுதி இருக்கானுங்க. அந்த புருடாவிற்க்கு   கூறும் ஆதாரம் எல்லாம் என்ன என்று பார்க்கலாம்.

                                   தாச சமுத்திரம் கல்வெட்டு  என்று தாச சமுத்திரம் ஏரிக்கரையில் இருக்கும் கல்வெட்டை 35 km  தூரத்தில் இருக்கும் கச்சிப்பள்ளியில் ஏரி வெட்டியதா கூறப்படும் காரணம் என்ன. கச்சிப்பள்ளி காமிண்டனை  கச்சிப்பள்ளியில்  காமிண்டன் என்று கூறும் அறிவாளிங்க கூறும் காலம் எதுவும் ஒத்து போகவில்லை.



  ஆதாரம் என்று சொல்ல படுவது: 
                                    கல்வெட்டை மறு ஆய்வு பண்ணி கொங்கு சோழன் என்று தொல்லியல் துறை (review) சொல்லியது .சரி மறு ஆய்வு பண்ணி என்ன சொல்லுச்சி  தாசசமுத்திரம் என்ற ஊரில் உள்ள கல்வெட்டு என்று மட்டுமே சொல்லி இருக்கு.அது கச்சிப்பள்ளி என்ற ஊரின்   இருவர்  ஏரி வெட்டினர். இது கொங்கு சோழன் ராஜராஜ சோழன்  வருடம் AD 1219.கல்வெட்டு இருக்கும் ஊர் இப்போதைய தாசசமுத்திரம் என்று அழைக்கப்படும்  ஊர்  என்று கல்வெட்டில் கூறப்பட்டு உள்ளது.இதை தான் கச்சிப்பள்ளி என்ற ஊரின் ஏரி என்றும் அந்த ஊரில் கொங்கர் மட்டுமே இருப்பதா கதை விட்டு இருக்கு வெள்ளாடு.தாசசமுத்திரம் வன்னியர் தேசம் அதே போல் கச்சிப்பள்ளியும் வன்னியர் தேசம்.அந்த ஊருக்குள் போய் பார்த்துவிட்டு வந்தா வெள்ளாட்டை அங்கேயே சூப்பு வைச்சி விடுவார்கள். 





கச்சிப்பள்ளி என்பது ஆள் இல்லை என்றும் அது  ஊர்பெயர் தான் என்று வெள்ளாடு சொல்லி இருக்கு.  ஊர் பெயர் தான் வைத்துக்கொண்டாலும்  கல்வெட்டில் கூறப்பட்ட  தாசசமுத்திரத்துக்கும் இவனுங்க கதை சொன்ன கச்சிப்பள்ளிக்கும்  உள்ள தூரம் அதிகம் இல்லை 35 km தான். ஆனா அடுத்த கதை அந்த குளம் இன்றும் கச்சிப்பள்ளி ஊரிலே இருக்காம்.ஏரிக்கும்  குளத்துக்கும் வித்தியாசம் தெரியல. இன்னும் கொடுமை அந்த ஏரியே எங்க இருக்கு என்று தெரியாமலே ஒரு பெரிய பதிவை போட்டு கதை சொல்லி இருக்கானுங்க. 

"வடபூவாணிய நாடு" என்ற நாட்டுக்கு தலைவன் என்று கூறப்பட்டவர்  கண்டியதேவர் என்ற குறிப்பு. இவனுங்க எப்போதும் காட்டும் tamilvu வில் கூட பூவாணிய நாட்டு ஊர்களில் கச்சிப்பள்ளி என்ற ஊர் இல்லை.
கச்சிப்பள்ளி பற்றிய முதல் குறிப்பு AD 1274 ம் வருடம்  பருத்திப்பள்ளி கோவில் கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.எந்த பருத்திப்பள்ளி  என்றால் செல்லன்குல மாணிக்கி என்று வெள்ளாட்டி  கொங்குதாசியா பட்டம் கட்டிய அதே கோவிலில்  கச்சிப்பள்ளி பற்றிய  முதல் குறிப்பு உள்ளது.


       
               22-11-2015 அன்று மின்தமிழ் என்ற தமிழ் ஆர்வலர்கள் செய்த பதிவில் சேலம் அருங்காட்சியகத்தில் உள்ள கல்வெட்டை படித்து படி எடுத்து பதிவு செய்து உள்ளனர்.அவர்கள் ஷேர் செய்த பதிவினை இந்த GOOGLEலிங்க்ல் காணலாம்.

https://groups.google.com/forum/#!topic/mintamil/tQWD7v7lcOA

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/solid-evidence-of-jallikatu-in-the-past/article6858606.ece

http://kannadigaworld.com/news/india/141840.html


             இதே கல்வெட்டைப்பற்றி  the hindu ஒரு கதை சொல்லியது அது என்ன என்றால் ஏரியை வெட்டியது மூன்றாம் ராஜராஜன் என்றும் வருடம் AD 1227  என்றும் அதை படித்து  குறிப்பு கூறியவர் N.குமாரசாமி என்றும்   கூறப்பட்டு உள்ளது.ஒரே கல்வெட்டை சோழ பேரரசர் முதலாம் ராஜராஜன் என்று கொடுமுடி சண்முகம் என்பவரும்,இந்திய தொல்லியல் துறை மறுஆய்வு என்று செய்து கொங்கு சோழன் என்றும்,அதே கல்வெட்டை குமாரசாமி படித்து மூன்றாம் இராஜராஜ சோழன் என்றும் கூறும் குழப்பம் ஏன் என்று தெரியவில்லை. இன்றும் கல்வெட்டின் மூலம் சேலம் அருங்காட்சியகத்தில் இருந்தும் வெள்ளாட்டி மட்டும் பொய் சொல்லும் காரணம் கச்சிப்பள்ளி காமிண்டன் என்பவர் வெட்டியதை   ஏரி என்பதை மறைக்க மட்டுமே. ஏரி வெட்டிய கச்சிப் பள்ளி காமிண்டன் பெயரால் அமைக்க பட்ட ஊர் தான் கச்சிப்பள்ளி.

         இதே வெள்ளாட்டி எழுதிய ப்ளாக்ல் "பராந்தகப்பள்ளி வேளான்" என்று ப் வைத்து கல்வெட்டு பள்ளிகளுக்கு மட்டுமே சாத்தியம் என்றான் ஆனா கச்சிப்பள்ளி என்று வந்தால் அது ப் வைக்கலாம் அது ஊரின் பெயர் என்று புருடா விட்டு இருக்கான் வெள்ளாட்டி.


கச்சிப்பள்ளிக்கும் ஏரி வெட்டபட்டுஉள்ள பூசாரிப்பட்டிக்கும் உள்ள தூரம்
35 கிமீ.உண்மையா வெட்டப்பட்ட ஏரி எங்கோ இருக்க வெள்ளாட்டிக்கி மட்டும்  கச்சிப்பள்ளி என்ற ஊரில்  ஏரியை வெட்டியதா ஒரு கதையை சொல்லி google MAPல் கூட கச்சிப்பள்ளி LAKE  என்று குறித்து வைத்து காமெடி பண்ணுறானுங்க.இது தான் அவனுங்க பேசும் உண்மை வரலாறு .














ராஜாராஜ சோழன் காலத்து ஏரி என்பதற்கு ஆதாரம் :

                                  கல்வெட்டு கூறும் வருடம் 996 என்றும் ஆட்சி ஆண்டு பதினொன்று என்றும் கூறப்பட்டு உள்ளது.ராஜராஜனின் ஆட்சி ஆரம்பித்த ஆண்டு 985 ம் வருடம். கல்வெட்டு வருடம் அவர் ஆட்சியாண்டு 11 ம் வருடம் 996  எனபதும் பொருந்துகிறது.




அடுத்து கொங்கு சோழன் ராஜராஜன் என்ற கதை :


 இந்திய தொல்லியல் துறை மறுஆய்வு செய்த  கல்வெட்டு சொல்லும் வருடம் 1219 கொங்கு சோழன் ராஜராஜனின் 11ம் ஆண்டு. கொங்கு சோழன் ஆட்சிக்கு வந்த வருடம் 1208 என்று எடுத்து கொண்டால் கூட   அப்போது  ஆட்சியில் இருந்தவன் வீர ராஜேந்திரன் என்ற கொங்கு சோழன்.அதற்கு தேவையான கல்வெட்டு ஆதராங்கள் நிறையவே உள்ளது.அப்படி இருக்க எதை  வைத்து மறுஆய்வில்  கொங்கு சோழன் ராஜராஜன் என்று சொன்னது தொல்லியல் துறை என்று தெரியவில்லை.





       கொங்கு சோழன் வீரராசேந்திரன்  என்ற சோழன் (1206 -1256) வரை ஆட்சி செய்து உள்ளான்.இரு கொங்கையும் ஆட்சி செய்தவன் என்று கூறப்பட்டு உள்ளது.இவன் காலத்தில் ஏரி எடுக்க பட்டதா சொன்னால் அவனுக்கு ராஜராஜசோழன் என்ற பெயர் இல்லை. அப்ப யார் தான் அந்த ராஜராஜன்  என்று கேட்டால் மூன்றாம் குலோத்துங்கன் மகனான மூன்றாம் ராஜராஜன் என்று புதுசா கல்வெட்டு படித்தவர்கள் சொல்லி இருக்காங்க. மூன்றாம் குலோத்துங்கனுக்கு பின் கொங்கு பகுதியில் சோழர்கள் ஆட்சி செய்ய வில்லை. பாண்டியனும் -பின்னர் ஹோய்சாலர்களும் ஆட்சி செய்தனர்.அதனால் மூன்றாம் ராஜராஜன் கல்வெட்டு எனபது தவறு.



வெள்ளைகாரன் எழுதிய குறிப்பில் நீர் பாசனம் செய்யும் அரசப்பள்ளி  :


                  கோயம்புத்தூர் பகுதியில் எடுக்க பட்ட குறிப்பில் அரச பள்ளி பற்றிய குறிப்பும் அவர்கள் விவசாயம் செய்யும் குடிகள் என்றும் தோட்டங்களுக்கு machinery மூலம் தண்ணீர் பாய்ச்சிய குறிப்பும் கூறப்பட்டு உள்ளது.அவர்களின் தலைவர்கள்  எஜமான் என்று அழைக்கபட்டு உள்ளனர்.பொது நிகழ்வுகளில் அவர்களுக்கு வெற்றிலை கொடுத்து  முதல் மரியாதை கொடுக்க பட்டு உள்ளது. பொது சபையின் மூலம் தாங்கள் சாதி மக்களுக்குள் இருக்கும் பிணக்குகளை தீர்த்து வைத்து உள்ளனர் என்ற குறிப்பு உள்ளது.






கடைசியா வெள்ளாட்டியின் புலம்பலுக்கு பதில்:


                    வெள்ளாட்டிக்கு மட்டுமே கவண்டன் என்று பட்டம் இருக்கு என்று நிரூபிக்க செய்யும் காமெடிக்கு அளவே இல்லமால் போய் விட்டது. கொங்கு வெள்ளாளனுக்கு மட்டுமே இருக்காம்.எந்த காலத்தில் இருந்து இருக்கு என்று சொல்ல முடியல. ஆனா இருக்கு.ஏன்டா காமிண்டன் என்ற சொல் எப்போ வந்தது என்று சொல்லுமுடியுமா. காமிண்டன் மலையை சார்ந்து இருக்கும் மக்களின் பட்டம்.கொங்கு தேசத்துக்கு கரிகால்சோழன்,பின்னர் சேரனுக்கு சீதனகுடி,கடைசியா மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில்  சோழ தேசத்தில் இருந்து விரட்டி அடிக்க பட்டு கொங்கு தேசத்துக்கு வந்தேறிய அடிமைக்கு கவண்டன் என்று பட்டம் எப்போ வந்தது. எழுதிய  செப்பேடுல் கூட நானோ தயிர் முட்டி சுமக்கும் வெள்ளாளன் என்று எழுதி வைச்சி இருக்க.வாணர் கூட சண்டை போட சொன்னா கொங்கு தாசியை வைத்து கோட்டைய புடிச்ச கதையை கூட கூச்சமே இல்லாம செப்பேடுகளில் பொரித்து வைச்சி இருக்க. 


கொங்குபகுதிக்கு காமிண்டன்  என்ற பெயர் 13 ம் நூற்றான்டு முதலே பயன்படுத்த பட்டதாக கொங்கு சோழன் என்ற நூலில் முனைவர் க.அ.புவனஸ்வரி அவர்கள் கூறியுள்ள தகவல்.கோ-தண்டர்கள் @ பசு காப்பவன் என்று அறியப்பட்ட வெள்ளாளன் எப்படி தன்னை கவுண்டர் என்று சொல்லும் கதை இது தான்.கோ-பசு   தண்டர்கள் -காப்பவன்.  விஜய நகர நாயக்கன் காலத்தில் தான் காமிண்டன் என்ற குறிப்பு அதிகமா இருக்காம்.காமிண்டன் என்ற நிருவாகி கொங்கு சோழன் ஆட்சியின் இறுதியில்  அறிமுகப்படுத்த படுகிறான்.அது கூட மூன்று ஊர் கல்வெட்டு மட்டுமே தானாம்


காமுண்டன் என்று முதலில் அழைக்க பட்டவர்கள்: -  மிலாடுடையார் @சேதிராயர்கள் என்ற மலைமண்ட அரசர்கள் தான் முதலில்  இந்த பட்டதை  பயன்படுத்தினர். இவர்கள் தங்களை வன்னியர்கள் என்று நேராக கூறுபவர்கள்.  இதனால் இந்த பெயரின்  வேர் எங்கு இருந்து ஆரம்பித்தது என்பதும் அது எந்த சமூகத்தை குறிக்கும் என்றும் அடுத்தவன் கூறி அறியும் நிலையில் வன்னிய சமூகம் இல்லை.


சித்தவடவன் காமுண்ட தேவன் :.




சோழர்காலத்தில் உள்ள காமுண்டர் கல்வெட்டுகள்.

              திருப்பன்துருத்தி  கோவில் கல்வெட்டு -தஞ்சை மாவட்டம் - முதலாம் பராந்தகன் காலத்தில் மிலாடுடையார்  என்று அறிய பட்ட சேதிராயர் -சித்தவடவன் காமுண்ட தேவன்.





ராஜேந்திர சோழன் காலத்தில்  ராட்ட குலகால ராஜேந்திரசோழ காமுண்டன் -வாணபுரத்து ஊர் காமுண்டன்.








ராஜேந்திரசோழன் காலத்தில் மோளிப்ப் பாலகாமுண்டர் மகன் -வசவாகாமுண்டன் 




குலோத்துங்க சோழ தேவர் காலத்தில் சாக்க காமுண்டன் மகன் சிஞ்ச  காமுண்டன் புலிகுத்தி பட்டான்.அவன் மனைவி வசவ காமுண்டன் மகள் சிக்கவை தீப்பாஞ்சாள்






ராஜேந்திர சோழ தேவர் காலத்தில் மணலூர் ஊர் சமந்த கொத்தயன் உத்தமனான சோழவிச்சாதிரகாமுண்டனும் -இடவா காமுண்டனும் ஏரி நீரை பயன்படுத்த கொடுக்க பட்ட உத்தரவு.



ஜெயங்கொண்ட சோழ விண்ணகரஆள்வார் பண்டாரத்துக்கு செய்து கொடுத்த கொடைக்கு சாட்சி கிழலை நாட்டு நாட்டு காமுண்டன் சோழவிச்சாதிர காமுண்டன் 



ராஜேந்திர சோழ தேவர் காலத்தில் சோழமாதேவிச சருப்பேதிமங்கலத்து சாசனம் எழுதியவர் கிழலை நாட்டு நாட்டு காமுண்டன் சோழ விச்சாதிர காமுண்டன்.




 அப்பி ஊரில் மாசி கவுண்டர் மகன் மல்லி கவுண்டனுக்கு சிலாசாணம் பண்ணி கொடுத்த செய்தி.




மணலூர் மணலூர்  கொத்தயன் உத்தமனான சோழவிச்சாதிரகாமுண்டனும் -விதியன் கொத்தயன் காமுண்டனும்  செய்த கொடை 



இந்த காமுண்டர் எல்லாம்  யார் என்றால் அது நான் மட்டுமே என்று  சொல்ல வெள்ளாட்டிக்கு ஒரு ஆதாரமமும் இல்லை.வன்னிய கவுண்டன் இன்றுவரையிலும் அதே பெயரில் தான் அழைக்க பட்டு கொண்டு உள்ளனர். கொங்கு மண்டல சதகம் எழுதிய காலத்தில் வெள்ளாளர் -வேட்டுவர் -படையாட்சி முதலிய  வகுப்பினருக்கு கவுண்டர் என்று வழங்கி வருகிறது  என்று சொல்லப் பட்டு இருக்க  இவனுங்க கவுண்டன்  என்றால் சாதி என்ற கதையை சொல்லிக்கிட்டு சுயஇன்பம்  அடைந்து கொள்கின்றனர்.










 
























கொங்கு வெள்ளாளர் என்று கூறப்படும் 16 சாதியினர். இதில் உள்ளவர்கள்  வெள்ளாளர்களுக்கு  கவுண்டர் என்ற பெயர் எந்த காலத்தில் வந்தது என்று கேட்டால்  சொல்ல முடியாது.காசு இருந்தா பட்டம் வரும் என்பதுக்கு இது தான் ஆதாரம். 






பள்ளி சாதிக்கு 9 ம் நூற்றாண்டுலேயே காமிண்டன் பட்டம் இருக்கு என்பதுக்கு எல்லாம் ஆதாரம் சோழன் காலத்தில் இருந்தே கொடுக்க பட்ட கல்வெட்டுகளே.சோழன் காலத்தில் இருந்தே காமிண்டன் பட்டம் கொண்ட வன்னியரை கேட்கும் முட்டாளே உனக்கு சோழன் காலத்தில் என்ன பட்டம் என்று சொல்ல முடியுமா. கச்சிப்பள்ளிக் காமிண்டன் வன்னிய கவுண்டர்  என்பதை   சேலம்  அருங்காட்சியகத்தில் இருக்கும் கல்வெட்டே சொல்லும். 



Saturday, 6 February 2016

மழவர் என்ற மழவராயர்கள் -வன்னியரே


தகடூர் அதியன் வாழ்ந்த தகடூர்நாடு.




     தற்போதைய தர்மபுரி மாவட்டத்தின் தலைநகர் தர்மபுரியே  பண்டைய தகடூர்.இயற்கையே அரணாக அமைந்த கோட்டையை காக்கும் வில் வீரர்கள் தோல்வியே அறியாதவர்கள் என்று சிறப்பாக அறியப்பட்டநாடு.



செல்வவளம் பொருந்திய நாடு. புலி போன்ற கொடிய விலங்குகள் கூட பிறஉயிர்களை துன்பம்செய்வதில்லை.இதனால் காட்டுக்கு புல்உண்ண செல்லும் பசுக்கூட்டம் வீடு திரும்ப மனம் இல்லாமல் காட்டிலே தங்கிவிடும். கள்ளர் பயம் இல்லை என்பதால் விவசாய விலை பொருளை களத்துமேட்டில் விட்டு விட்டு இரவு காவல் இல்லமால் இருக்கும் உழவர்களும்,திருட்டு பயம் இல்லாததால் தகடூரில் தங்கும் வழிபோக்கர்களும் தகடூரின் மக்கள் பெருமையையும் அதியர் குடிமக்களை கலங்காமல் காப்பாற்றிய செங்கோல் என்று அதியரின் ஆட்சியை கூறிஉள்ள புறநானூறு.


        தகடூர் நாட்டில்  நடுவண்குதிரை என்ற குன்றின் உச்சியில் உள்ள நெல்லிமரம் தரும் நெல்லிக்கனி அதை உண்பவருக்கு நீண்ட ஆயுளை கொடுக்கும் வலிமை கொண்டது.அத்தகைய பெருமை கொண்ட குதிரைகுன்று கொண்ட தகடூர்நாடு. அதியர்குலத்தில் வந்த அரசனே தமிழகத்துக்கு முதன் முதலில் கரும்பை கொடுவந்து பயிர் செய்த பெருமை கொண்டவன். அதியர்குலத்து அரசனே நெல்லிக்கனியை ஔவைக்கு அளித்து கடையேழு வள்ளலில் ஒருவரானார்.இந்த அதியர்குலத்து அரசனே மூவேந்தர்களுக்கும் படைகொடுக்கும் வலிமையும்-கடலால் அழிக்கமுடியாத அரனை போல் மலையை கொண்ட மலையமான் ஆட்சி செய்த திருக்கோவிலூரை முற்றிலும் அழித்து முதுபெறும் புலவர் பரணரால் பாடப்பெற்ற பெருமையையும் உடையது அதியர்குலம்.



 கொங்கரும் அதியரும் வேறு வேறு: 


கொங்கரை பாண்டியனுக்கான போரில் விரட்டிய அதியர். கொங்கரை வெற்றி கொள்ள பசும்பூண்பாண்டியன் குதிரைபடை மழவரை கொண்ட அதியனின் உதவியை நாடினான்.அதியன் கொங்குநாடு புகுந்து கொங்கரை வென்று பாண்டியனுக்கு கொங்குநாட்டை வழங்கினான்.


   அதே பாண்டியனுக்கு சோழனோடு  போரிட்டு வாகை என்ற இடத்தில் இறந்த செய்தி கேட்டு கொங்கர் மகிழ்ச்சி அடைந்தனர் என்ற செய்தியால் கொங்கருக்கும் அதியருக்கும் ஒரு தொடபும் இல்லை என்பதை அறியலாம். இருவரும் வேறு நாடு என்று விளங்கும்.

மழவரும் அதியரும்: 


திருச்சியை அடுத்த உறையூரின் மேற்க்கே காவிரியின் வடகரையில் உள்ள நாடு மழநாடு என்று அழைக்கப்பட்டது.
இன்றும் திருமழபாடி என்ற ஊர் கொள்ளிடகரையில் இருப்பது இதே மழநாட்டுக்கு சான்று.இதையே பன்னாட்டார் வாழும் பண்ணாடு என்றும் கல்வெட்டுகள் கூறுகின்றன.
            
வண்டு மொய்க்கும் பூக்களை மாலையாக அணிந்து கழல் அணிந்த காலோடு குதிரைபடை துணையோட வரும் மழவரை கண்ட அரசன் எல்லாம் தன் நாட்டுக்கு அழிவு வந்தது என்று அச்சம் கொள்ளும் படையை கொண்டவர்கள்

ஆநிரை கவரும் மழவர்கள் தன் குலத்து இளையருக்கு விற்பயிற்சி அளித்து அவர்களின் திறமையை அரங்கேற்றம் செய்யும் விழாவாக பூந்தொடைவிழா என்று கொண்டாடி மகிந்தனர்.இதே பின்னாளில் விஜயதசமி முதல்நாள்  கொண்டாபட்டு  ஆயுத பூசை என்று இப்போது வழங்கபடுகிறது.
   
   விற்போரில் வல்லவரான மழவரை ஆதரித்த சேரகுலஅரசர்கள் பல்யானைச் செல்கெழுகுட்டுவன்- ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் இருவரும் மழவர்மெய்மறை என்று பாராட்டினை பெற்றனர்.

    சேரனின் பனந்தோடு அணியும் அதியமான்நெடுமான்அஞ்சி மழவரை போற்றி ஆதரித்து மழவர்பெருமான் என்றும் மழவரின் தலைவன் என்ற பெயர் பெற்றார்.


மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் அதியமான் இராசராச தேவன் என்ற அரசன் தகடூர் நாட்டு மலையனூரை திருவண்ணாமலை கோவிலுக்கு இறையிலியாக வழங்கிய்ள்ளார்

திருமலையில் இருக்கு கல்வெட்டு கூறும் செய்தி:           

              சேரகுலத்து அதிகமான் எழினி எடுப்பித்த  யக்ஷி-யக்ஷன் சிலைகளை அவன் குலத்தில் வந்த தகடூரை சேர்ந்த விடுகதாரகிய பெருமாள்என்பவர்  ஜீனேரோத்தனம் செய்த செய்தி திருமலை கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளது.  











மழவர்கள் என்பவர்கள் "சிலை வீரர்கள்" (வில் வீரர்கள்) என்று நச்சினார்கினியர் அவர்கள் கி.பி.12-ஆம் நூற்றாண்டில் குறிப்பிடுகிறார்கள். இன்றைய "அரியலூர், பெரம்பலூர்" மாவட்டங்கள் சங்ககாலத்தில் "மழ நாடென்றே" வழங்கப்பெற்றது.  "மழவர் பெருமகன் அதியமான்" நாடான  தகடுரும் (தருமபுரி), "மழவர் பெருமகன் வல்வில் ஓரியின்" நாடான கொல்லிமலையும் "மழவர் நாடென்று" சங்க காலத்தில் வழங்கப்பெற்றது.  மழநாட்டில் தொன்றுதொட்டு வாழ்ந்து வரும் குடிகளில்  "மழவர் குடியும்" ஒன்றாகும். அத்தகைய குடியோர் "வன்னியர்கள்" ஆவார்கள். இவ் மழவர் குடியில் வந்தவளே சோழர்களின் ராஜமாதாவாக விளங்கிய  "செம்பியன் மாதேவி"  ஆவாள்.   பிற்காலச் சோழர்கள் காலத்தில் "வன்னியர்கள்" மழநாட்டின் "வில் வீரர்களாக" சோழர் படையில் பணியாற்றியிருக்கிறார்கள்.  அவர்கள் "பள்ளிகள்" என்ற பெயராலும் அழைக்கப்பெற்றிருக்கிறார்கள்.  கிழ் காணும் சோழர்கள் காலத்து  கல்வெட்டு "மழவர்களின்" பராக்கிரமம் பற்றி தெரிவிக்கிறது மற்றும் அவர்களுடைய எல்லைகளையும் எடுத்து சொல்கிறது.



The scholar "Noboru Karashima" says about the  "Aduturai Inscription" (A.R.E. No.35 of 1913) :-

"The Pannattar (also called Palli Nattar) from the Nadu and Nagaram of all Mandalams met at the garden called Periyanattan-Ka in a large assembly and decided to collect one panam (a coin) per bow held by members, etc, for worship in the local temple.  The decision was made to revive an old arrangement made by their ancestors and recorded in an inscription of Vikrama Chola (1122 A.D).  According to that inscription a large assembly of the Palli Nattar, including all the Pallis living within the area bounded by the Pachchai hills in the west, the tank Viranarayana-Pereri in the east, the Pennai river in the north, and the Kaveri river in the south, had decided to contribute 50 Kasu and One Kuruni of rice from each family to the temple at Iraiyanpunchai Kurangadu(urai) on the happy occasion of the reconsecration of images recovered from Dorasamudram, the Hoysala capital where they had been taken during a Hoysala invasion.  At that time the king also permitted them to carry their banner with the words Pannattar Tampiran (the god of Pannattar) on festival processions.  

The Palli people described here composed the bowmen regiment of the Chola army and this regiment seems to have recovered the images by attacking the Hoysala capital under the command of Vikrama Chola.  The area of their habitation defined in this inscription covers a hilly and dry area extending roughly a hundred kilometers from north to south and eighty kilometers from east to west in Tiruchirapalli and South Arcot Districts. 


அரியலூர் மழவர்கள் :

         சங்ககாலத்தில் அரசில் என்று அறியபட்ட அரியலூர் தான் பிற்கால மழவராயர்களின் அரசு அமைக்க பட்ட ஊர். மழபாடி என்று அழைக்கப்பட்ட திருமழபாடி அரியலூரில் இருந்து 25 கிமீ தூரத்தில் அமைந்து உள்ளது. மழபாடியின் முதற்குறிப்பு கிபி 6ம் நூற்றாண்டில் பல்லவ மன்னர் ஐயடிகள் காடவர்கோன் பாடிய பாடலும் 


"இழவாடிச் சுற்றத்தா ரெல்லோரும் கூடி 
 விழவாடி யாவிவிடா முன்னம் -மழபாடி 
ஆண்டானை யாரமுதை யன்றன்மால் 
 காணாமை நீண்டானைநெஞ்சே நினை"  

அவருக்கு பின்னர் தேவாரப்பாடல்களும் திருமழபாடியின் வரலாறையும் மழவரையர்கள் பற்றியும் அறிய உதவும்.


மழவராயர் மகள்   செம்பியன் மாதேவியார் :

                         



செம்பியன் மாதேவி மழவராயர் மகள் என்று அறியப்பட்டவர். கண்டராதித்த சோழனை மணந்தவர். ராஜராஜ சோழனின் வளர்ப்பு தாயாக அறியப்பட்டவர்.அவர் பெயரால் திருமழபாடியில் செம்பியன்மாதேவிப்பேரேரி என்றும் அவர் சிறப்பு பெயரான குலமாணிக்கம் பெயரால் வாய்க்கலும் வெட்டப்பட்டதகவல் கல்வெட்டில் உள்ளது.தற்போது இரண்டும் செம்பியகுடி என்றும் குலமாணிக்கம் என்ற ஊர் பெயரை தாங்கி இருக்கிறது.செம்பியன் மாதேவியின் கணவர் பெயரில் அமைந்த கண்டராதித்தம் என்ற ஊரும் இந்த இரண்டு ஊருக்கு அருகிலேயே அமைந்து உள்ளதும் மழவர்கள்- சோழன்கள் உறவுக்கு பறைசாற்றும் தொடர்புகள்.இந்த ஊரின் மழவர்கள் என்ற வன்னியமக்களே இதற்க்கு சான்று.    

 வரலாற்று ஆர்வலரும் பொறியியல் வல்லுனருமான திருRajaram Komagan அவர்கள் பதிவில் இருந்து. 26/04/2016 அன்று கண்டராத்ததில்" கண்டராதித்தன் -செம்பியன் மாதேவி"க்கு சிலை எடுக்கப்பட்ட நிகழ்வு பற்றி குறிப்பிட தகவல்.அந்த குறிப்பை அவர் பதிவில் இருந்து அப்படியே கொடுக்கப்படுகிறது.

 செம்பியன்மாதேவி பேரேரி :


              பேரேரியின் பரப்பளவு 416 ஏக்கர்.இவ்வளவு பெரிய ஏரி கொள்ளிடக் கரையில், நிலத்தினூடேயான கடல்.அதை பார்க்கும்போதெல்லாம்
அதைவெட்டியவன் நினைவுக்கு வருகிறான்.அதை வெட்ட துணை நின்ற ஆட்சியும்,இன்றைக்கு அதை தூர்வாரி பராமரிக்காத ஆட்சியும் நினைவுவருவது தவிர்க்க முடியாதது ஆகிறது.

         இன்றைய கண்டாராதித்தத்தில் அன்று கண்டராதித்த சதுர்வேதி மங்கலம்.
ராசராசனின் ஆனைமங்கலச் செப்பேட்டில் குறிப்பிடும் கண்டராதித்தம்.அதன் அடுத்த ஊர் செம்பியக்குடி.இதுவெல்லாம் இராசேந்திரப்பேராறான கொள்ளிடக் கரை அமைந்த திருமழப்பாடி அருகில் உள்ள ஊர்.தன் அகப்பட்ட பெண்டாட்டியின் பெயரால் ஏரி வெட்டி தன் பெயரில் ஊர் அமைத்தவன்.ஏழாண்டுகளே ஆட்சி பீடத்திலிருந்தான்.திருவிசப்பா பாடிய ஒரே சோழமன்னன்.அதுகண்டராதித்தசோழன்.
 
          செம்பியக்குடியில் தான் மழவர்குடி தோன்றலான செம்பியன் மாதேவி பிறந்தார் என அவ்வூர் மக்கள் நம்புகின்றனர்.செம்பியக்குடி மக்கள் மாமனார் வீட்டுச் சீர்வரிசைத் தட்டுகளோடு ஊர்வலமாய் கண்டராதித்ததிற்கு வருகின்றனர்.கண்டராதித்தம் மக்கள் ஊர்வலமாக மங்கல இசை முழக்கத்தோடு பெரியமாலைகள் கொண்டு வருகின்றனர்,இவையெல்லாம் யாருக்கு? எதற்கு?இதுவரை கண்டிராத 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மனிதனுக்கு மரியாதை செய்ய,தங்களை இம்மண்ணில் ஊன்றியவனுக்கு நன்றி சொல்ல,அவ்வூரில் நேற்று கண்டராதித்தனுக்கும் செம்பியன்மாதேவிக்கும் சிலை எடுக்கப்பட்டது அவ்வூர் மக்களால்.
          
                     கண்டராதித்தன் வெட்டிய செம்பியன்மாதேவி பேரேரி காய்ந்து போய்கிடக்கிறது 416 ஏக்கரில் ஆனால் ஈரம் கசிந்து கொண்டிருக்கிறது அவ்வூர் மக்கள் மனதில்-"எவன்டா சொன்னது தமிழர்களுக்கு வரலாற்றுணர்வு இல்லை,அதை கொண்டாட தெரியாதவர்கள் என்று!"என கம்பீரமாக நிற்கும் கண்டராதித்தர் கேட்கிறார்.

 கண்டராதித்தன் -செம்பியன் மாதேவி  சிலை எடுத்த மழவர்கள்:








மழபாடியின் மாமனிதர்கள்:


  1. மழபாடித் தென்னவன் மாதேவி என்பவர் உத்தம சோழனை மணந்து உள்ளார்.
  2. ராஜராஜன் காலத்து குறுநில அரசன் பரமன் மழபாடியாரான மும்முடி சோழன் தலைமையில் சீட்புலி-பாகி நாடுகள் ராஜராஜன் வெற்றி பெற்றார்.
  3. அழகியதிருமழபாடியுடையான் தென்னவத்தரையன் என்றபவர் சடையவர்மன் சுந்தரபாண்டியன் படைதலைவனாக பணியாற்றிஉள்ளார்.
  4. மாறவர்மன் குலசேகர பாண்டியன் காலத்தில் சுந்தரபாண்டிய மழவராயன்.
  5. செவ்வப்ப மழவராய சோழகன் தஞ்சை நாயக்கர் காலத்தில் இருந்தவர்.



ஊர் பேரும் வரலாற்று தொடர்பும் :

1.      கண்டராதித்த சதுர்வேதிமங்கலம்-தற்போது கண்டராதித்தம்.
2.      செம்பியன்மாதேவிகுடி-தற்போது செம்பியக்குடி
3.      செம்பியன் மாதேவியின்  சிறப்பு பெயரான குலமாணிக்கம் என்ற பெயர் கொண்ட ஊரும் அருகில் இருக்கிறது.
4.       வைத்தியனாத ஈஸ்வரமுடையார் பெயரால் அமைக்க பட்ட ஊர் தற்போது வைத்தியநாதன் பேட்டை. 

இன்றும் இந்த ஊர்களில் அதிகமாக வாழும் மக்கள்  

வன்னியமழவர்களே







வைத்தியநாதன் : 

"மழபாடியுள் மேய மருந்து "
                                               "மழபாடி மருந்து"
       "மன்னிலங்கி மாமழபாடியை  
                            உன்னில் அங்க உறுபிணி இல்லையே ",  


என்று திருமழபாடி இறைவன் மீது பாடப்பட்ட வரிகளே இறைவன்
பெயரை உணர்த்தும் படி அமைந்துள்ளது.
ருத்திரன் தான் வைத்தியர்களுள் பெரிய வைத்தியன் 
என்று வேதம் கூறுகின்றது
                   
        இந்த மழவர் வழிவந்த வன்னியகுல வைத்தியர்கள் இன்றும்
சேலம், தருமபுரி பகுதியில்  தங்கள் பரம்பரை  மருத்துவத்தை
தொடர்ந்து செய்து வருகின்றனர். அவர்களின் குலதெய்வமாக
வைத்தியநாதன் இருந்தவருவதும் இதற்க்கு ஆதாரம்.

                                          






அரியலூர் மழவராயர்கள் :  



                   ரங்க கிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கர்  காலத்தில் அரியலூர் பாளையத்தில் இருந்த நான்கு விலைமதிப்பிலா பொருளை வேண்டி அரியலூர் வந்த நாயக்கன் 

                            1. ராம லஷுமணா என்ற  ஒட்டகம்
                            2. சின்ன ராம பாணம் என்ற பட்டாகத்தி
                            3. ரண வீர பத்ரா என்ற யானை 
                            4.முத்து கட்சு என்ற வெள்ளை குதிரை 





அந்தகக் கவி வீரராகவ முதலியார் இந்த ஊருக்கு வந்து பரிசு பெற்றுச்சென்றார். அக்காலத்தில் இங்கே ஜமீன்தாராக இருந்தவர் கிருஷ்ணையஒப்பிலாத மழவராயரென்பவர்.





கவி வீரராகவ முதலியார் வந்த காலத்தில் ஜமீன்தார் படியளந்துகொண்டிருப்பதை அறிந்தார். பல பேர்களுக்கு வழங்க வேண்டியிருந்தமையின்நெடுநேரமாயிற்று, அதை உணர்ந்த கவிஞருக்குப் பெருவியப்பு உண்டாயிற்று.‘ஏதேது! இன்றைக்கு லக்ஷம் பேருக்குப் படி அளந்திருப்பார்போல் இருக்கிறதே’என்று நினைத்தார். கவிஞர் நினைப்பதற்கும் மற்றவர்கள் நினைப்பதற்கும்வித்தியாசம் இல்லையா? அவர் நினைப்பு ஒரு கவியாக மலர்ந்தது, 


“சேயசெங் குன்றை வருமொப்பி லாதிக்குச் செங்கமலத்தூயசெங் கண்ணன் இணையொப்ப னோதண் துழாயணிந்தமாயன் அளக்கும் படிமூன்று க்ருஷ்ணைய மாமழவராயன் அளக்கும் படியொரு நாளைக் கிலக்கமுண்டே.”

இந்த ஒப்பில்லாத மழவராயருக்கு மகாவிஷ்ணு ஒப்பாவரோ? திருமால் அளந்ததுமூன்றுபடியே 

(படி-உலகம்) இவர் அளப்பது ஒரு நாளைக்கு லக்ஷம் இருக்குமே’ 



கிருஷ்ணைய ஒப்பிலாத மழவராயர் ஏழைகளுக்கு இரங்கும்
தன்மையினர். புலவர்களை ஆதரிக்கும் வள்ளல். தினந்தோறும் தம்மிடம்
விருந்தினர்களாக வந்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் வேண்டிய பொருளை
வழங்குவதை முதற்கடமையாகக் கொண்டனர். அவரவர்களுக்கு
வேண்டியவைகளை அளந்து தரச் செய்தனர்.






குன்னரங்கன் என்ற அரசன் இறந்த போது சுப்ரதீபக் கவிராயர் பாடிய கவிதை .




தமிழுக்குத் தலைவனான மழவ ரங்கபூபதி பெற்ற மகனாகிய குன்னரங்கனே  என்று பாடியதில் இருந்து மழ்வராயர்கள் தமிழ் மொழிக்கு செய்த சிறப்பும் விளங்கும்




குன்ன ரங்க பூபதி இறந்த பின் பூமியை ஆள  ஒப்பில்லாத நின புதல்வன் மழவன் போதும் ,விண்ணுலகம் சென்று நீண்ட காலமாக நிலையில்லா ஆட்சி செய்யும் இந்திரனை அகற்றி அந்த தேவலோகத்தை ஆட்சி செய்வாயாக என்று கூறி குன்ன ரங்கபூபதியின் அரசு ஆட்சியை கூறிஉள்ளார்.






     மழநாட்டில்  வடக்கே இருந்து குடியேறிய  சமர்த்த பிராமிணர்கள் லால்குடி பகுதியில் குடியேறி இருந்தனர். அவர்கள் மழநாட்டின்  பெயராலே  "மழ நாட்டு பிரகசரணம் " என்று அழைக்க பட்டு வந்தனர். இந்த  "மழ நாட்டு பிரகசரணம் " என்ற பிரமிணர்வகுப்பின்  வழிவந்தவர்  தான் தமிழ் தாத்தா என்று போற்ற பட்ட  உ வே  சாமிநாத அய்யர் அவர்கள். அவரது முன்னோர்கள் அரியலூர் மழவராயர்களால் போற்ற பட்டதை அவர் தொகுத்த நூல்களில் குறிப்பிட்டுள்ளார்.


அரியலூர் மழவர் பற்றிய கல்வெட்டுகள் 



ஸ்ரீரங்கம் கோவிலுக்கு தானம் செய்த பள்ளிகொண்டபெருமாள்  கற்பூரம் மழவராயர் @ அழகிய மணவாள தாசர். 























அரியலூர் கிருஷ்ணப்ப மழவராயர் 




சின்ன ரெங்கப்ப மழவராயர் 







ரெங்கப்ப மழவராயர் 













விருத்தாசலம்  கோவில் கல்வெட்டில் உள்ள  திருமாலிருசசோலை நின்றனான  மழவராயன் என்று அழைக்கப்பட்ட மாவலி வாணாதிராயர்கள்.








சூடிகொடுத்த நாச்சியார் கோவில் ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வெட்டுகள் :

                                                                       சொக்கனேந்தல் என்ற சுந்தரதோளுடை நல்லூர்  என்ற ஊரில் கொடுக்கப்பட்ட நிலம் பற்றிய குறிப்பில் திருமாலிரும்சோலை நின்றான் ஆன மாவலி வாணதராயர் குமாரன்  சுந்தர தோளுடை மழவராயன் தன் தாயார் ஸ்ரீரெங்க நாயகியார் பெயரில் "மழவராயன் மாதாக்கள்" என்று  செய்த நிலம் தானம்.






ஹோய்சாலதண்டநாயகர் லோக்கனா தண்டநாயகர் செய்த தானம் அடுக்களை செலவுக்கு குறைவாக இருந்த காரணத்துக்கு அழகிய மணவாள தாசர் என்ற பள்ளி கொண்ட கற்பூரமழவராயர் என்ற மழவருக்கு அவர் கேட்டுக்கொண்டதன் பெயரில் "சோழ மண்டலம் மழவராயன்பற்றில் முள்ளி ஆற்று கலக்கலூர் குலதீப மங்கலம்" என்ற ஊரை தானம் கொடுத்த செய்தி.

இந்த ஊர் கும்பகோணம் அருகில் குடவாசலில் உள்ள  வெட்டாறு தான் முள்ளிஆறு.இந்த வெட்டாறு கரையில் இருந்த ஊர் தான் கலக்கலூர். இப்போதைய பெயர் கொள்ளம்பூதூர் ஆக இருக்கலாம். 

   



திருத்துறைப்பூண்டி கல்வெட்டில்   "தேவராய மழவராயர் "







மன்னார்குடி கல்வெட்டில் பாண்டியனை விரட்டுய    "ஸ்ரீ மழவன் "



முதலாம் ஜடாவர்மன் குலசேகரன் காலத்தில் அமைச்சராக மழவராயர்.






                  செம்பொன்மாரியின் மழவச்சக்ரவர்த்தி  என்ற சுந்தர பாண்டியனின் தளபதியை  சிங்களர் படையெடுப்பில் கைது செய்ததாக சிங்களநூல் மகாவம்சமும் கூறுகிறது. இந்த காலகட்டத்தில் தான் பாண்டியர்கள் தங்கள் அரசபீடத்தை மழவராயனில்  என்று பெயரிட்டனர். இதனால் பாண்டியனுக்கு மழவர்கள் உறவும்,இந்த மழவசக்கரவர்த்திகளின் வழிவந்தவர்களே   பாண்டியனால்  இலங்கையில் அரசராக்க பட்ட ஆரிய சக்ரவர்த்திகளை ஆட்சியில் அமர்தியவர்கள்  ஆவர்.






குலசேகரன் காலத்தில் மும்முடிச் சோழ பழவமாணிக்கமான 
மழவச்சக்ரவர்த்திகள்:




அரியலூரில் கிருஷ்ணப்ப மழவராயர் அவர்கள் கட்டிய  தசாவதார கோவில் -அதற்கு  பின் அவர் மகன் ஒப்பிலாத மழவராயர் புனர் நிர்மானம் செய்துள்ளார்.






அரியலூருக்கு பெருமை சேர்க்கும் ஆன்மிகத் தலமாக விளங்குகிறது கோதண்டராமர் கோவில்.

                         இக்கோவில் 1570-களில் பாளையக்கார ஜமீன்தார்களில் ஒருவரான கிருஷ்ண மழவராயர் என்பவரால் உருவாக்கப்பட்டுள்ளது. அவருக்குப்பின் அவரது வாரிசான ஒப்பில்லாத மழவராயர் கோவிலை புனரமைப்பு செய்துள்ளார். இதற்கு ஆதாரமாக கோவில் தூணொன்றில் ஒப்பில்லா மழவராயர் சிலை வடிக்கப் பட்டுள்ளது.


மழவர்கள்  சோழனுக்கு பெண் கொடுத்தவர்கள்,  பாண்டியனுக்கு படை தலைவராக உதவியவர்கள் -இலங்கையில் மழவக்குடி அமைய காரணமாக இருந்தவர்கள் எல்லாமே  வன்னிய மழவர்கள். இன்றும் அரியலூரில் வாழும் மழவக்குடி  வன்னியர்களே மழவராயர்கள்.