Saturday, 6 February 2016

மழவர் என்ற மழவராயர்கள் -வன்னியரே


தகடூர் அதியன் வாழ்ந்த தகடூர்நாடு.




     தற்போதைய தர்மபுரி மாவட்டத்தின் தலைநகர் தர்மபுரியே  பண்டைய தகடூர்.இயற்கையே அரணாக அமைந்த கோட்டையை காக்கும் வில் வீரர்கள் தோல்வியே அறியாதவர்கள் என்று சிறப்பாக அறியப்பட்டநாடு.



செல்வவளம் பொருந்திய நாடு. புலி போன்ற கொடிய விலங்குகள் கூட பிறஉயிர்களை துன்பம்செய்வதில்லை.இதனால் காட்டுக்கு புல்உண்ண செல்லும் பசுக்கூட்டம் வீடு திரும்ப மனம் இல்லாமல் காட்டிலே தங்கிவிடும். கள்ளர் பயம் இல்லை என்பதால் விவசாய விலை பொருளை களத்துமேட்டில் விட்டு விட்டு இரவு காவல் இல்லமால் இருக்கும் உழவர்களும்,திருட்டு பயம் இல்லாததால் தகடூரில் தங்கும் வழிபோக்கர்களும் தகடூரின் மக்கள் பெருமையையும் அதியர் குடிமக்களை கலங்காமல் காப்பாற்றிய செங்கோல் என்று அதியரின் ஆட்சியை கூறிஉள்ள புறநானூறு.


        தகடூர் நாட்டில்  நடுவண்குதிரை என்ற குன்றின் உச்சியில் உள்ள நெல்லிமரம் தரும் நெல்லிக்கனி அதை உண்பவருக்கு நீண்ட ஆயுளை கொடுக்கும் வலிமை கொண்டது.அத்தகைய பெருமை கொண்ட குதிரைகுன்று கொண்ட தகடூர்நாடு. அதியர்குலத்தில் வந்த அரசனே தமிழகத்துக்கு முதன் முதலில் கரும்பை கொடுவந்து பயிர் செய்த பெருமை கொண்டவன். அதியர்குலத்து அரசனே நெல்லிக்கனியை ஔவைக்கு அளித்து கடையேழு வள்ளலில் ஒருவரானார்.இந்த அதியர்குலத்து அரசனே மூவேந்தர்களுக்கும் படைகொடுக்கும் வலிமையும்-கடலால் அழிக்கமுடியாத அரனை போல் மலையை கொண்ட மலையமான் ஆட்சி செய்த திருக்கோவிலூரை முற்றிலும் அழித்து முதுபெறும் புலவர் பரணரால் பாடப்பெற்ற பெருமையையும் உடையது அதியர்குலம்.



 கொங்கரும் அதியரும் வேறு வேறு: 


கொங்கரை பாண்டியனுக்கான போரில் விரட்டிய அதியர். கொங்கரை வெற்றி கொள்ள பசும்பூண்பாண்டியன் குதிரைபடை மழவரை கொண்ட அதியனின் உதவியை நாடினான்.அதியன் கொங்குநாடு புகுந்து கொங்கரை வென்று பாண்டியனுக்கு கொங்குநாட்டை வழங்கினான்.


   அதே பாண்டியனுக்கு சோழனோடு  போரிட்டு வாகை என்ற இடத்தில் இறந்த செய்தி கேட்டு கொங்கர் மகிழ்ச்சி அடைந்தனர் என்ற செய்தியால் கொங்கருக்கும் அதியருக்கும் ஒரு தொடபும் இல்லை என்பதை அறியலாம். இருவரும் வேறு நாடு என்று விளங்கும்.

மழவரும் அதியரும்: 


திருச்சியை அடுத்த உறையூரின் மேற்க்கே காவிரியின் வடகரையில் உள்ள நாடு மழநாடு என்று அழைக்கப்பட்டது.
இன்றும் திருமழபாடி என்ற ஊர் கொள்ளிடகரையில் இருப்பது இதே மழநாட்டுக்கு சான்று.இதையே பன்னாட்டார் வாழும் பண்ணாடு என்றும் கல்வெட்டுகள் கூறுகின்றன.
            
வண்டு மொய்க்கும் பூக்களை மாலையாக அணிந்து கழல் அணிந்த காலோடு குதிரைபடை துணையோட வரும் மழவரை கண்ட அரசன் எல்லாம் தன் நாட்டுக்கு அழிவு வந்தது என்று அச்சம் கொள்ளும் படையை கொண்டவர்கள்

ஆநிரை கவரும் மழவர்கள் தன் குலத்து இளையருக்கு விற்பயிற்சி அளித்து அவர்களின் திறமையை அரங்கேற்றம் செய்யும் விழாவாக பூந்தொடைவிழா என்று கொண்டாடி மகிந்தனர்.இதே பின்னாளில் விஜயதசமி முதல்நாள்  கொண்டாபட்டு  ஆயுத பூசை என்று இப்போது வழங்கபடுகிறது.
   
   விற்போரில் வல்லவரான மழவரை ஆதரித்த சேரகுலஅரசர்கள் பல்யானைச் செல்கெழுகுட்டுவன்- ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் இருவரும் மழவர்மெய்மறை என்று பாராட்டினை பெற்றனர்.

    சேரனின் பனந்தோடு அணியும் அதியமான்நெடுமான்அஞ்சி மழவரை போற்றி ஆதரித்து மழவர்பெருமான் என்றும் மழவரின் தலைவன் என்ற பெயர் பெற்றார்.


மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் அதியமான் இராசராச தேவன் என்ற அரசன் தகடூர் நாட்டு மலையனூரை திருவண்ணாமலை கோவிலுக்கு இறையிலியாக வழங்கிய்ள்ளார்

திருமலையில் இருக்கு கல்வெட்டு கூறும் செய்தி:           

              சேரகுலத்து அதிகமான் எழினி எடுப்பித்த  யக்ஷி-யக்ஷன் சிலைகளை அவன் குலத்தில் வந்த தகடூரை சேர்ந்த விடுகதாரகிய பெருமாள்என்பவர்  ஜீனேரோத்தனம் செய்த செய்தி திருமலை கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளது.  











மழவர்கள் என்பவர்கள் "சிலை வீரர்கள்" (வில் வீரர்கள்) என்று நச்சினார்கினியர் அவர்கள் கி.பி.12-ஆம் நூற்றாண்டில் குறிப்பிடுகிறார்கள். இன்றைய "அரியலூர், பெரம்பலூர்" மாவட்டங்கள் சங்ககாலத்தில் "மழ நாடென்றே" வழங்கப்பெற்றது.  "மழவர் பெருமகன் அதியமான்" நாடான  தகடுரும் (தருமபுரி), "மழவர் பெருமகன் வல்வில் ஓரியின்" நாடான கொல்லிமலையும் "மழவர் நாடென்று" சங்க காலத்தில் வழங்கப்பெற்றது.  மழநாட்டில் தொன்றுதொட்டு வாழ்ந்து வரும் குடிகளில்  "மழவர் குடியும்" ஒன்றாகும். அத்தகைய குடியோர் "வன்னியர்கள்" ஆவார்கள். இவ் மழவர் குடியில் வந்தவளே சோழர்களின் ராஜமாதாவாக விளங்கிய  "செம்பியன் மாதேவி"  ஆவாள்.   பிற்காலச் சோழர்கள் காலத்தில் "வன்னியர்கள்" மழநாட்டின் "வில் வீரர்களாக" சோழர் படையில் பணியாற்றியிருக்கிறார்கள்.  அவர்கள் "பள்ளிகள்" என்ற பெயராலும் அழைக்கப்பெற்றிருக்கிறார்கள்.  கிழ் காணும் சோழர்கள் காலத்து  கல்வெட்டு "மழவர்களின்" பராக்கிரமம் பற்றி தெரிவிக்கிறது மற்றும் அவர்களுடைய எல்லைகளையும் எடுத்து சொல்கிறது.



The scholar "Noboru Karashima" says about the  "Aduturai Inscription" (A.R.E. No.35 of 1913) :-

"The Pannattar (also called Palli Nattar) from the Nadu and Nagaram of all Mandalams met at the garden called Periyanattan-Ka in a large assembly and decided to collect one panam (a coin) per bow held by members, etc, for worship in the local temple.  The decision was made to revive an old arrangement made by their ancestors and recorded in an inscription of Vikrama Chola (1122 A.D).  According to that inscription a large assembly of the Palli Nattar, including all the Pallis living within the area bounded by the Pachchai hills in the west, the tank Viranarayana-Pereri in the east, the Pennai river in the north, and the Kaveri river in the south, had decided to contribute 50 Kasu and One Kuruni of rice from each family to the temple at Iraiyanpunchai Kurangadu(urai) on the happy occasion of the reconsecration of images recovered from Dorasamudram, the Hoysala capital where they had been taken during a Hoysala invasion.  At that time the king also permitted them to carry their banner with the words Pannattar Tampiran (the god of Pannattar) on festival processions.  

The Palli people described here composed the bowmen regiment of the Chola army and this regiment seems to have recovered the images by attacking the Hoysala capital under the command of Vikrama Chola.  The area of their habitation defined in this inscription covers a hilly and dry area extending roughly a hundred kilometers from north to south and eighty kilometers from east to west in Tiruchirapalli and South Arcot Districts. 


அரியலூர் மழவர்கள் :

         சங்ககாலத்தில் அரசில் என்று அறியபட்ட அரியலூர் தான் பிற்கால மழவராயர்களின் அரசு அமைக்க பட்ட ஊர். மழபாடி என்று அழைக்கப்பட்ட திருமழபாடி அரியலூரில் இருந்து 25 கிமீ தூரத்தில் அமைந்து உள்ளது. மழபாடியின் முதற்குறிப்பு கிபி 6ம் நூற்றாண்டில் பல்லவ மன்னர் ஐயடிகள் காடவர்கோன் பாடிய பாடலும் 


"இழவாடிச் சுற்றத்தா ரெல்லோரும் கூடி 
 விழவாடி யாவிவிடா முன்னம் -மழபாடி 
ஆண்டானை யாரமுதை யன்றன்மால் 
 காணாமை நீண்டானைநெஞ்சே நினை"  

அவருக்கு பின்னர் தேவாரப்பாடல்களும் திருமழபாடியின் வரலாறையும் மழவரையர்கள் பற்றியும் அறிய உதவும்.


மழவராயர் மகள்   செம்பியன் மாதேவியார் :

                         



செம்பியன் மாதேவி மழவராயர் மகள் என்று அறியப்பட்டவர். கண்டராதித்த சோழனை மணந்தவர். ராஜராஜ சோழனின் வளர்ப்பு தாயாக அறியப்பட்டவர்.அவர் பெயரால் திருமழபாடியில் செம்பியன்மாதேவிப்பேரேரி என்றும் அவர் சிறப்பு பெயரான குலமாணிக்கம் பெயரால் வாய்க்கலும் வெட்டப்பட்டதகவல் கல்வெட்டில் உள்ளது.தற்போது இரண்டும் செம்பியகுடி என்றும் குலமாணிக்கம் என்ற ஊர் பெயரை தாங்கி இருக்கிறது.செம்பியன் மாதேவியின் கணவர் பெயரில் அமைந்த கண்டராதித்தம் என்ற ஊரும் இந்த இரண்டு ஊருக்கு அருகிலேயே அமைந்து உள்ளதும் மழவர்கள்- சோழன்கள் உறவுக்கு பறைசாற்றும் தொடர்புகள்.இந்த ஊரின் மழவர்கள் என்ற வன்னியமக்களே இதற்க்கு சான்று.    

 வரலாற்று ஆர்வலரும் பொறியியல் வல்லுனருமான திருRajaram Komagan அவர்கள் பதிவில் இருந்து. 26/04/2016 அன்று கண்டராத்ததில்" கண்டராதித்தன் -செம்பியன் மாதேவி"க்கு சிலை எடுக்கப்பட்ட நிகழ்வு பற்றி குறிப்பிட தகவல்.அந்த குறிப்பை அவர் பதிவில் இருந்து அப்படியே கொடுக்கப்படுகிறது.

 செம்பியன்மாதேவி பேரேரி :


              பேரேரியின் பரப்பளவு 416 ஏக்கர்.இவ்வளவு பெரிய ஏரி கொள்ளிடக் கரையில், நிலத்தினூடேயான கடல்.அதை பார்க்கும்போதெல்லாம்
அதைவெட்டியவன் நினைவுக்கு வருகிறான்.அதை வெட்ட துணை நின்ற ஆட்சியும்,இன்றைக்கு அதை தூர்வாரி பராமரிக்காத ஆட்சியும் நினைவுவருவது தவிர்க்க முடியாதது ஆகிறது.

         இன்றைய கண்டாராதித்தத்தில் அன்று கண்டராதித்த சதுர்வேதி மங்கலம்.
ராசராசனின் ஆனைமங்கலச் செப்பேட்டில் குறிப்பிடும் கண்டராதித்தம்.அதன் அடுத்த ஊர் செம்பியக்குடி.இதுவெல்லாம் இராசேந்திரப்பேராறான கொள்ளிடக் கரை அமைந்த திருமழப்பாடி அருகில் உள்ள ஊர்.தன் அகப்பட்ட பெண்டாட்டியின் பெயரால் ஏரி வெட்டி தன் பெயரில் ஊர் அமைத்தவன்.ஏழாண்டுகளே ஆட்சி பீடத்திலிருந்தான்.திருவிசப்பா பாடிய ஒரே சோழமன்னன்.அதுகண்டராதித்தசோழன்.
 
          செம்பியக்குடியில் தான் மழவர்குடி தோன்றலான செம்பியன் மாதேவி பிறந்தார் என அவ்வூர் மக்கள் நம்புகின்றனர்.செம்பியக்குடி மக்கள் மாமனார் வீட்டுச் சீர்வரிசைத் தட்டுகளோடு ஊர்வலமாய் கண்டராதித்ததிற்கு வருகின்றனர்.கண்டராதித்தம் மக்கள் ஊர்வலமாக மங்கல இசை முழக்கத்தோடு பெரியமாலைகள் கொண்டு வருகின்றனர்,இவையெல்லாம் யாருக்கு? எதற்கு?இதுவரை கண்டிராத 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மனிதனுக்கு மரியாதை செய்ய,தங்களை இம்மண்ணில் ஊன்றியவனுக்கு நன்றி சொல்ல,அவ்வூரில் நேற்று கண்டராதித்தனுக்கும் செம்பியன்மாதேவிக்கும் சிலை எடுக்கப்பட்டது அவ்வூர் மக்களால்.
          
                     கண்டராதித்தன் வெட்டிய செம்பியன்மாதேவி பேரேரி காய்ந்து போய்கிடக்கிறது 416 ஏக்கரில் ஆனால் ஈரம் கசிந்து கொண்டிருக்கிறது அவ்வூர் மக்கள் மனதில்-"எவன்டா சொன்னது தமிழர்களுக்கு வரலாற்றுணர்வு இல்லை,அதை கொண்டாட தெரியாதவர்கள் என்று!"என கம்பீரமாக நிற்கும் கண்டராதித்தர் கேட்கிறார்.

 கண்டராதித்தன் -செம்பியன் மாதேவி  சிலை எடுத்த மழவர்கள்:








மழபாடியின் மாமனிதர்கள்:


  1. மழபாடித் தென்னவன் மாதேவி என்பவர் உத்தம சோழனை மணந்து உள்ளார்.
  2. ராஜராஜன் காலத்து குறுநில அரசன் பரமன் மழபாடியாரான மும்முடி சோழன் தலைமையில் சீட்புலி-பாகி நாடுகள் ராஜராஜன் வெற்றி பெற்றார்.
  3. அழகியதிருமழபாடியுடையான் தென்னவத்தரையன் என்றபவர் சடையவர்மன் சுந்தரபாண்டியன் படைதலைவனாக பணியாற்றிஉள்ளார்.
  4. மாறவர்மன் குலசேகர பாண்டியன் காலத்தில் சுந்தரபாண்டிய மழவராயன்.
  5. செவ்வப்ப மழவராய சோழகன் தஞ்சை நாயக்கர் காலத்தில் இருந்தவர்.



ஊர் பேரும் வரலாற்று தொடர்பும் :

1.      கண்டராதித்த சதுர்வேதிமங்கலம்-தற்போது கண்டராதித்தம்.
2.      செம்பியன்மாதேவிகுடி-தற்போது செம்பியக்குடி
3.      செம்பியன் மாதேவியின்  சிறப்பு பெயரான குலமாணிக்கம் என்ற பெயர் கொண்ட ஊரும் அருகில் இருக்கிறது.
4.       வைத்தியனாத ஈஸ்வரமுடையார் பெயரால் அமைக்க பட்ட ஊர் தற்போது வைத்தியநாதன் பேட்டை. 

இன்றும் இந்த ஊர்களில் அதிகமாக வாழும் மக்கள்  

வன்னியமழவர்களே







வைத்தியநாதன் : 

"மழபாடியுள் மேய மருந்து "
                                               "மழபாடி மருந்து"
       "மன்னிலங்கி மாமழபாடியை  
                            உன்னில் அங்க உறுபிணி இல்லையே ",  


என்று திருமழபாடி இறைவன் மீது பாடப்பட்ட வரிகளே இறைவன்
பெயரை உணர்த்தும் படி அமைந்துள்ளது.
ருத்திரன் தான் வைத்தியர்களுள் பெரிய வைத்தியன் 
என்று வேதம் கூறுகின்றது
                   
        இந்த மழவர் வழிவந்த வன்னியகுல வைத்தியர்கள் இன்றும்
சேலம், தருமபுரி பகுதியில்  தங்கள் பரம்பரை  மருத்துவத்தை
தொடர்ந்து செய்து வருகின்றனர். அவர்களின் குலதெய்வமாக
வைத்தியநாதன் இருந்தவருவதும் இதற்க்கு ஆதாரம்.

                                          






அரியலூர் மழவராயர்கள் :  



                   ரங்க கிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கர்  காலத்தில் அரியலூர் பாளையத்தில் இருந்த நான்கு விலைமதிப்பிலா பொருளை வேண்டி அரியலூர் வந்த நாயக்கன் 

                            1. ராம லஷுமணா என்ற  ஒட்டகம்
                            2. சின்ன ராம பாணம் என்ற பட்டாகத்தி
                            3. ரண வீர பத்ரா என்ற யானை 
                            4.முத்து கட்சு என்ற வெள்ளை குதிரை 





அந்தகக் கவி வீரராகவ முதலியார் இந்த ஊருக்கு வந்து பரிசு பெற்றுச்சென்றார். அக்காலத்தில் இங்கே ஜமீன்தாராக இருந்தவர் கிருஷ்ணையஒப்பிலாத மழவராயரென்பவர்.





கவி வீரராகவ முதலியார் வந்த காலத்தில் ஜமீன்தார் படியளந்துகொண்டிருப்பதை அறிந்தார். பல பேர்களுக்கு வழங்க வேண்டியிருந்தமையின்நெடுநேரமாயிற்று, அதை உணர்ந்த கவிஞருக்குப் பெருவியப்பு உண்டாயிற்று.‘ஏதேது! இன்றைக்கு லக்ஷம் பேருக்குப் படி அளந்திருப்பார்போல் இருக்கிறதே’என்று நினைத்தார். கவிஞர் நினைப்பதற்கும் மற்றவர்கள் நினைப்பதற்கும்வித்தியாசம் இல்லையா? அவர் நினைப்பு ஒரு கவியாக மலர்ந்தது, 


“சேயசெங் குன்றை வருமொப்பி லாதிக்குச் செங்கமலத்தூயசெங் கண்ணன் இணையொப்ப னோதண் துழாயணிந்தமாயன் அளக்கும் படிமூன்று க்ருஷ்ணைய மாமழவராயன் அளக்கும் படியொரு நாளைக் கிலக்கமுண்டே.”

இந்த ஒப்பில்லாத மழவராயருக்கு மகாவிஷ்ணு ஒப்பாவரோ? திருமால் அளந்ததுமூன்றுபடியே 

(படி-உலகம்) இவர் அளப்பது ஒரு நாளைக்கு லக்ஷம் இருக்குமே’ 



கிருஷ்ணைய ஒப்பிலாத மழவராயர் ஏழைகளுக்கு இரங்கும்
தன்மையினர். புலவர்களை ஆதரிக்கும் வள்ளல். தினந்தோறும் தம்மிடம்
விருந்தினர்களாக வந்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் வேண்டிய பொருளை
வழங்குவதை முதற்கடமையாகக் கொண்டனர். அவரவர்களுக்கு
வேண்டியவைகளை அளந்து தரச் செய்தனர்.






குன்னரங்கன் என்ற அரசன் இறந்த போது சுப்ரதீபக் கவிராயர் பாடிய கவிதை .




தமிழுக்குத் தலைவனான மழவ ரங்கபூபதி பெற்ற மகனாகிய குன்னரங்கனே  என்று பாடியதில் இருந்து மழ்வராயர்கள் தமிழ் மொழிக்கு செய்த சிறப்பும் விளங்கும்




குன்ன ரங்க பூபதி இறந்த பின் பூமியை ஆள  ஒப்பில்லாத நின புதல்வன் மழவன் போதும் ,விண்ணுலகம் சென்று நீண்ட காலமாக நிலையில்லா ஆட்சி செய்யும் இந்திரனை அகற்றி அந்த தேவலோகத்தை ஆட்சி செய்வாயாக என்று கூறி குன்ன ரங்கபூபதியின் அரசு ஆட்சியை கூறிஉள்ளார்.






     மழநாட்டில்  வடக்கே இருந்து குடியேறிய  சமர்த்த பிராமிணர்கள் லால்குடி பகுதியில் குடியேறி இருந்தனர். அவர்கள் மழநாட்டின்  பெயராலே  "மழ நாட்டு பிரகசரணம் " என்று அழைக்க பட்டு வந்தனர். இந்த  "மழ நாட்டு பிரகசரணம் " என்ற பிரமிணர்வகுப்பின்  வழிவந்தவர்  தான் தமிழ் தாத்தா என்று போற்ற பட்ட  உ வே  சாமிநாத அய்யர் அவர்கள். அவரது முன்னோர்கள் அரியலூர் மழவராயர்களால் போற்ற பட்டதை அவர் தொகுத்த நூல்களில் குறிப்பிட்டுள்ளார்.


அரியலூர் மழவர் பற்றிய கல்வெட்டுகள் 



ஸ்ரீரங்கம் கோவிலுக்கு தானம் செய்த பள்ளிகொண்டபெருமாள்  கற்பூரம் மழவராயர் @ அழகிய மணவாள தாசர். 























அரியலூர் கிருஷ்ணப்ப மழவராயர் 




சின்ன ரெங்கப்ப மழவராயர் 







ரெங்கப்ப மழவராயர் 













விருத்தாசலம்  கோவில் கல்வெட்டில் உள்ள  திருமாலிருசசோலை நின்றனான  மழவராயன் என்று அழைக்கப்பட்ட மாவலி வாணாதிராயர்கள்.








சூடிகொடுத்த நாச்சியார் கோவில் ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வெட்டுகள் :

                                                                       சொக்கனேந்தல் என்ற சுந்தரதோளுடை நல்லூர்  என்ற ஊரில் கொடுக்கப்பட்ட நிலம் பற்றிய குறிப்பில் திருமாலிரும்சோலை நின்றான் ஆன மாவலி வாணதராயர் குமாரன்  சுந்தர தோளுடை மழவராயன் தன் தாயார் ஸ்ரீரெங்க நாயகியார் பெயரில் "மழவராயன் மாதாக்கள்" என்று  செய்த நிலம் தானம்.






ஹோய்சாலதண்டநாயகர் லோக்கனா தண்டநாயகர் செய்த தானம் அடுக்களை செலவுக்கு குறைவாக இருந்த காரணத்துக்கு அழகிய மணவாள தாசர் என்ற பள்ளி கொண்ட கற்பூரமழவராயர் என்ற மழவருக்கு அவர் கேட்டுக்கொண்டதன் பெயரில் "சோழ மண்டலம் மழவராயன்பற்றில் முள்ளி ஆற்று கலக்கலூர் குலதீப மங்கலம்" என்ற ஊரை தானம் கொடுத்த செய்தி.

இந்த ஊர் கும்பகோணம் அருகில் குடவாசலில் உள்ள  வெட்டாறு தான் முள்ளிஆறு.இந்த வெட்டாறு கரையில் இருந்த ஊர் தான் கலக்கலூர். இப்போதைய பெயர் கொள்ளம்பூதூர் ஆக இருக்கலாம். 

   



திருத்துறைப்பூண்டி கல்வெட்டில்   "தேவராய மழவராயர் "







மன்னார்குடி கல்வெட்டில் பாண்டியனை விரட்டுய    "ஸ்ரீ மழவன் "



முதலாம் ஜடாவர்மன் குலசேகரன் காலத்தில் அமைச்சராக மழவராயர்.






                  செம்பொன்மாரியின் மழவச்சக்ரவர்த்தி  என்ற சுந்தர பாண்டியனின் தளபதியை  சிங்களர் படையெடுப்பில் கைது செய்ததாக சிங்களநூல் மகாவம்சமும் கூறுகிறது. இந்த காலகட்டத்தில் தான் பாண்டியர்கள் தங்கள் அரசபீடத்தை மழவராயனில்  என்று பெயரிட்டனர். இதனால் பாண்டியனுக்கு மழவர்கள் உறவும்,இந்த மழவசக்கரவர்த்திகளின் வழிவந்தவர்களே   பாண்டியனால்  இலங்கையில் அரசராக்க பட்ட ஆரிய சக்ரவர்த்திகளை ஆட்சியில் அமர்தியவர்கள்  ஆவர்.






குலசேகரன் காலத்தில் மும்முடிச் சோழ பழவமாணிக்கமான 
மழவச்சக்ரவர்த்திகள்:




அரியலூரில் கிருஷ்ணப்ப மழவராயர் அவர்கள் கட்டிய  தசாவதார கோவில் -அதற்கு  பின் அவர் மகன் ஒப்பிலாத மழவராயர் புனர் நிர்மானம் செய்துள்ளார்.






அரியலூருக்கு பெருமை சேர்க்கும் ஆன்மிகத் தலமாக விளங்குகிறது கோதண்டராமர் கோவில்.

                         இக்கோவில் 1570-களில் பாளையக்கார ஜமீன்தார்களில் ஒருவரான கிருஷ்ண மழவராயர் என்பவரால் உருவாக்கப்பட்டுள்ளது. அவருக்குப்பின் அவரது வாரிசான ஒப்பில்லாத மழவராயர் கோவிலை புனரமைப்பு செய்துள்ளார். இதற்கு ஆதாரமாக கோவில் தூணொன்றில் ஒப்பில்லா மழவராயர் சிலை வடிக்கப் பட்டுள்ளது.


மழவர்கள்  சோழனுக்கு பெண் கொடுத்தவர்கள்,  பாண்டியனுக்கு படை தலைவராக உதவியவர்கள் -இலங்கையில் மழவக்குடி அமைய காரணமாக இருந்தவர்கள் எல்லாமே  வன்னிய மழவர்கள். இன்றும் அரியலூரில் வாழும் மழவக்குடி  வன்னியர்களே மழவராயர்கள்.